
அமெரிக்காவில் உட்டா என்ற நகரில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த நிலையில் சம்பவ நாளன்று ரயில்வே கேட் பாதையில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக ரயில் ஒன்று வருவதால் வாகனங்கள் செல்லாமல் இருக்க கேட் போடப்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இதனை கவனிக்காமல் வேகமாக ரயில்வே கேட்டுக்குள் சென்று விட்டது.
கார் கேட்டுக்குள் சிக்கியதை உணர்ந்த ஓட்டுநர் காரை மீண்டும் வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கார் பின்னால் கொண்டு வருவதற்கு முடியவில்லை. அந்த சமயம் தண்டபாளத்தில் ரயில் ஹாரன் ஒலித்தபடியே வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த கார் டிரைவர் பதறி அடித்து காரில் இருந்து வேகமாக கீழே இறங்கி ஓடியுள்ளார்.
இதன்பின் வேகமாக வந்த ரயில் கார் மீது மோதி கார் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. நொடி பொழுதில் காரில் இருந்து ஓட்டுநர் இறங்கி ஓடியதால் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. சிலர் ஓட்டுனரின் சாமர்த்தியத்தை பாராட்டியுள்ளனர்.