இளைஞர்களை நாம் வழி நடத்த வேண்டும் என்றால் ? அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள், அவர்களை நம்முடைய மொழி சார்ந்த வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கொள்கை முடிவுகளை கொண்டு வர வேண்டும். அதற்கு நிச்சயமாக நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். அவங்க அவங்க அவுங்க வழியில் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

தமிழ்நாட்டுல தமிழுக்காக கிட்டத்தட்ட 20,000 இயக்கங்கள் இருக்கின்றது. 20, 000 இயக்கங்கள் தமிழுக்காக தமிழ்நாட்டில கடந்த 50 60 ஆண்டுகளாக நடத்திட்டு இருக்காங்க. அப்போ இவ்வளவு இயக்கங்கள் நடத்தியும்,  நாம்  வெற்றி பெற்றோமா,  இல்ல வெற்றிக்கு அருகிலேயே சென்றோமா,  இல்லை. இன்னும் நீண்ட கால பயணம் நமக்கு இருக்கின்றது. நீண்ட காலம் பயணம் இருக்கின்றது. இன்னும் நாம் வெற்றி கிட்ட கூட போகல. அதை உறுதி செய்கின்ற வகையில் நம்முடைய வேந்தர் அவர்கள் தலைமையிலே நிச்சயமாக நல்ல இயக்கம் என தெரிவித்தார்.