ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழக அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையை முழுமையாக படிக்காமல் ஆங்காங்கே விட்டுவிட்டு ஆளுநர்  படித்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர், மு.க ஸ்டாலின் ஆளுநர் தமிழ்நாடு அரசின் சார்பில் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருந்த உரையை அப்படியே வாசிக்காதது வருத்தம் அளிப்பதாக பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆளுநர்  உரையில் தவிர்த்து  படித்திருந்த பகுதிகள் அவை குறிப்பில் இடம்பெறாது.

சபாநாயகர் அப்பாவு பேசிய பகுதிகள் மட்டுமே இடப்படும் என முதல்வர் பேசினார். அதனைத் தொடர்ந்து அவையில் இருந்த ஆளுநருக்கு அங்கிருந்தவர்கள் மொழி பெயர்த்து சொன்ன உடனே ஆளுநர் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். தேசிய தேசிய கீதம் பாடி அவை நடவடிக்கைகள் முடியும் முன்னரே ஆளுநர் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.