ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பயன்படுத்தும் ‘ஆரஸ் செனட் கார்’ (Aurus Senat Car), அதன் பாதுகாப்பு அம்சங்களுக்காகப் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்தக் கார் தண்ணீரில் விழுந்தாலும் மிதக்கும் சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. இது குண்டு துளைக்காத கடினத் தன்மையையும், வானூர்தித் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கும் வகையிலான அம்சங்களையும் கொண்டது.
இந்தக் காரின் அனைத்து டயர்களும் சேதமடைந்தாலும், அதைத் தொடர்ந்து அதிவேகத்தில் ஓட்டிச் செல்ல முடியும். மேலும், நச்சு வாயுக்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக, உள்ளேச் சுத்தமான காற்றை வடிகட்டும் அமைப்பு இந்தக் காரில் உள்ளது.
புதினின் இந்தப் பாதுகாப்பானக் கார், அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புச் சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
