கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் முக்கிய சட்டமாக கருதப்படுகிறது. அதைப்போல இதை  யாராலும் தடுக்க முடியாது. இதனை  கட்டாயம் அமல்படுத்துவோம் என அமித் ஷா பேசி உள்ளார். அது  மட்டுமல்லாமல் மேற்கு வங்கத்தில் 112 பாஜகவினர் தற்போது கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த கொலைக்கு மக்கள் கண்டிப்பாக கட்டாயம் பழிவாங்குவார்கள் எனவும் கூறி உள்ளார்.

அதே போல,  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக  எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்கள். உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 220 மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து சட்ட போராட்டங்களையும் மத்திய அரசு முன்னெடுத்து செல்லும் என அதே பொதுக்கூட்டத்தில் பேசிய மற்றொரு மத்திய இணை அமைச்சரும் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.