சேலம் அஸ்தம்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒரு கட்டடம் வலுவாக இருக்க வேண்டும் என்று சொன்னால் ? அதன்  அஸ்திவாரம் வலுவாக இருக்க வேண்டும். அதேபோல ஒரு தேர்தலில்  வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் ? பூத் அமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். அப்படி வலிமையாக இருந்தால் தான், நாம் நிறுத்துகின்ற வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும்.

பூத் கமிட்டி அமைப்பு என்பது,  தேர்தல் நேரத்திலே நம்முடைய வாக்காளர்களை அழைத்து வருவது, தேர்தல் நடக்கின்ற இடத்தில் அமர்ந்து,   கள்ள ஓட்டு போடுவதை தவிர்ப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது,  இந்த பணிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதோடு மகளிர் அணியை சேர்ந்தவர்கள்… பாசறையை சேர்ந்தவர்கள் அந்த பூத்துக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள்….  அதனால் மக்கள் பெற்ற பலன்கள்…..

நன்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். இது மிக மிக முக்கியம்.  இன்றைய தினம் மக்களை நேரில் சந்தித்து,  நம்முடைய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை நீங்கள் விலக்கி சொல்லுகின்ற பொழுது…  அது நம்முடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருக்கும். தேர்தலில் நிற்கின்ற நம்முடைய வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார். அதோடு 2 1/2 ஆண்டு காலம் மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற அவலங்கள்  எடுத்துச் சொல்ல வேண்டும்.

2021 ஆம் ஆண்டு இன்றைய முதலமைச்சர், அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக இருந்த பொழுது,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் வெளியிட்டார்கள்.  இப்பொழுது முதலமைச்சர் பேசுகிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டது என்று ஒரு பச்சை பொய்யை இன்றைக்கு புளுகி  கொண்டிருக்கிறார்.

இது மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும்.  அதற்கு தங்களுக்கு கையேடுகள் நாங்கள் கொடுக்கப் போறோம். என்னென்ன அறிவிப்புகள் வெளியிட்டிருக்கின்றார்கள் ? திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை  ஏமாற்றிக்கொண்டு இருக்கின்ற விடியா திமுக ஆட்சியில்  என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற புள்ளி விவரத்தோடு நீங்கள் மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.