சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். மணல் ஆற்றுக்கு தோல். உலகத்தின் தலைசிறந்த நீர் வடிகட்டி,  நீர் தேக்கி. அதை  அள்ளி வித்துப்புட்ட….  வள கொள்ளை தான் உலகத்தில் கொடுமையான கொள்ளை. அதைப்பற்றி எவனும் பேச மாட்டான்.

கேரளாவில் விளிங்கம்ல துறைமுகம் கட்ட கன்னியாகுமாரியில் மேற்குத்தொடர்ச்சி மலையை வெட்டி கொடு போறான்.கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை இருக்கு. அங்க தான் தொடக்கம். அங்கே ஏன் மலையை தொடல. அவனுக்கு அப்பனே தலைவனா இருக்கான். பெத்தவனே அப்பனா இருக்கான். எனக்கு 50 வருஷமா மத்தவனே அப்பனா இருக்கான். அவனுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. எங்க அம்மா விதவையா இருந்தாலும் கவலையில்லை.

எங்க அக்கா செத்தா என்ன ? என் அப்பன் செத்தா என்ன ? எவன் பட்டினி கிடந்தா என்ன ? ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை. அந்தத் தொகையை எங்கிருந்து எடுத்த ? 2 லட்சத்து 50 பேர் விதவைகள். அது மகளிர்க்கு நீ கொடுத்த உதவியா ? 2 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் விதவைகள் யாரு ? அன்பு சொந்தங்களே…  குண்டு போட்டுக் கொல்வது மட்டுமல்ல இனப்படுகொலை.  குடிக்க வைத்துக் கொல்வதும்  இனப்படுகொலை.

உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். ஆயிரம் ரூபாயை எங்க அம்மா கிட்ட கொடுத்தா  எங்க அப்பா அந்த காச வாங்கிட்டு போய் குடிப்பாரா ? என்ன பண்ணுவாரு ? எங்க அண்ணன் குடிப்பானா ? இல்லையா ?  என் தம்பி அம்மாவும் சண்டை போட்டு அடிச்சுகிட்டு பணத்தை வாங்கிட்டு போய் குடிப்பாங்க. அதை சேமிச்சு சேமித்து வைத்து 20 வருஷம் கழிச்சு உங்க பொம்பள புள்ளைய நல்லபடியா கட்டிக் கொடுக்கலாம்னு சொல்றான்.

அப்போ எப்படி ? 20 வருஷமா இந்த ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தி தான் இருப்பேன்னு சொல்றான்.1000 ரூபாய் வாங்கி வாங்கி சேமிக்கணும். அப்போ 20 வருஷமானாலும் இந்த ஆயிரம் ரூபாய்க்கு கையேந்திர நிலையில்தான் என் அம்மாவும்,  என் பெரியம்மாவும்,  என் அக்காவும் நிக்க போறாங்க என்பதை சொல்றான் என தெரிவித்தார்.