தல அஜித்தின் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு வரை பேட்டிகள், நேர்காணல்கள் போன்றவற்றில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார் இயக்குனர் ஹெச்.வினோத். இதையடுத்து துணிவு திரைப்படத்திற்கு பிறகு பல நேர்காணல்களில் அவரை காண முடிந்தது. அதிலும் குறிப்பாக தனது வாழ்க்கை முறை, சமூக பொருளாதார என பல பரிமாற்றங்களை பற்றி வினோத் பேசியது சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்நிலையில் வாரிசு, துணிவு ஆகிய திரைப்படங்களுக்கு அளித்த வரவேற்பினை கடைசி விவசாயி திரைப்படத்திற்கும் கொடுத்திருக்க வேண்டும் என்று இயக்குனர் வினோத் பேசியிருந்தது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் தனியார் பத்திரிக்கை குழும நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டிருந்தார். அப்போது அவர் பேசியதாவது “பிசினஸ் உள்ள இடத்தில் நேர்மையை எதிர்பார்க்க இயலாது. தல, தளபதி திரைப்படங்களுக்கு கொடுத்த வரவேற்பை கடைசி விவசாயி படத்திற்கும் கொடுத்திருக்க வேண்டும் என அவர் பேசியிருந்தார்.