விருதுநகர் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் கிரீன் ஆப்பிள் கிட்ஸ் எனும் தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட காமெடி நடிகரும், டைரக்டருமான தம்பி ராமையா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது “எந்த தாய்-தந்தையும் ஜெயித்து விட்டு வா என்று சொல்ல மாட்டார்கள். ரிஸ்க் எடுக்காதவர் வாழ்க்கையானது முட்டாளுக்கு சொந்தமானது.

குழந்தைகளுக்கு தன்னைத் தானே காதலிக்க கற்றுக்கொடுங்கள். உறவுகளைப் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். குழந்தைகளுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுக்காதீர்கள். அதோடு குழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு பெற்றோர்கள் சண்டை போடாதீர்கள் என பல அறிவுரைகளை அவர் வழங்கியுள்ளார்.