மத்தியபிரதேசத்தில் 5-வது கேலோ இந்தியா யூத் விளையாட்டு (22 வயதுக்குட்பட்ட) 8 இடங்களில் நடைபெற்றது. 27 வகை விளையாட்டில் 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இதில் ஆண்களுக்குரிய 200 மீட்டர் நீச்சல்போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மஹாராஷ்டிரா அணிக்காக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேலோ இந்தியா யூத் தொடரின் நீச்சல் போட்டியில் 2 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்கள் வென்று மாதவனின் மகன் வேதாந்த் அசத்தியுள்ளார்.