நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈகோர்ட் திட்டத்திற்கு இ கோர்ட் திட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கு 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார். கூடுதலாக 50 விமான தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு சென்டர்கள் நிறுவப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.