நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தை நோக்கி வழிநடத்துவோம். இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.