நாட்டில் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நாடாளுமன்றத்தில் இன்று முதல்முறையாக முழுமையான இன்று முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2024-25 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிளாட்டினம் நகைகள் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அதன்படி பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.