2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டமானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் ஆனது பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் நெருங்குகிறது என்பதால் நடுத்தர மக்களை பாதிக்காத புதிய வரிகள் இல்லாத, சலுகைகள் நிறைந்த பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது வரிச் சலுகை அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியானது கடந்த 2022 ஆம் வருடம் வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை ஐந்து முறை உயர்த்தியது.

இதனால் தனிநபர் வங்கி கடன் முதல் வீட்டு கடன் வரையிலான அனைத்து கடன்களுக்கான வட்டியும் அதிகரித்தது. இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு சிறிய அளவிலான வரி சலுகை அறிவிப்பு எதுவும் இடம்பெறலாம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது வங்கி கடன் மூலம் வாங்கிய வீட்டிலேயே வசிப்பவர்களுக்கான சலுகை வரம்பு உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.