2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டமானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் ஆனது பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் வரலாற்றில் பத்து சுவாரசியமான தகவல்கள் உள்ளது. அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம். மூன்று வழக்கமாக நிதி 3: இதற்கு அர்த்தம் என்னவென்றால் அமைச்சர்கள் யாரும் இல்லாத நிலையில் மூன்று பிரதமர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். இதில் மூன்று பேரும் நேரு காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள். 1958 ஜவஹர்லால் நேரு பட்ஜெட் தாக்கல் செய்தார். 1970ல் இந்திரா காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார். 1987 இல் ராஜீவ் காந்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

800: 1970-ல் ஹெச்.எம் பட்டேலின் பட்ஜெட் உரையில் உள்ள வார்த்தைகளுடைய எண்ணிக்கை தான் 800 என்பதாகும். இதுநாள் வரை எந்த ஒரு நிதியமைச்சரும் ஆற்றிடாத மிகக் குறுகிய உரை. இதுவே படேல் தன்னுடைய உரையை சுருக்கமாக சொன்னதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் பட்ஜெட் கணக்கீடுகள் முந்தைய அரசாங்கத்தால் செய்யப்பட்டன. மேலும் அரசியலமைப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்த அவருக்கு மார்ச் 31 1977 வரை மட்டுமே கால அவகாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

18,700: இந்த எண்ணிக்கை என்பது என்னஎன்றால், டாக்டர் மன்மோகன் சிங்கின் 1991 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உள்ள தோராயமான வார்த்தைகளின் எண்ணிக்கை. இது மிக நீண்ட பட்ஜெட். 1991 பட்ஜெட் நாட்டில் பொருளாதார தாராளமயமாக்களை ஏற்படுத்தியதால் வரலாற்றில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பகுப்பாய்வு செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில் ஒன்றாக உள்ளது.

162: இந்த எண்ணிக்கை எதை குறிக்கிறது என்றால், 2020 ஆம் பட்ஜெட் தாக்கல் செய்யும்பொழுது நிர்மலா சீதாராமன் பேசிய மொத்த நிமிடங்கள். 2019 ஆம் வருடத்தில் எந்த ஒரு நிதி அமைச்சரும் நிகழ்த்திடாத மிக நீண்ட உரை. இது 2019 ஆம் ஆண்டில் அவருடைய சொந்த சாதனையான 137 நிமிடங்களை முறியடித்தது.

1999 என்பது மத்திய பட்ஜெட் நேரம் 5 மணியிலிருந்து காலை 11:00 மணியாக மாற்றப்பட்ட வருடம். அவ்வாறு செய்வதன் மூலமாக வாஜ்பாய் அரசாங்கம் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நேர வித்தியாசத்திற்கு இடம் அளிக்கும் விதமாக நிறுவப்பட்ட காலனித்துவ நடைமுறையை நீக்கியது.