நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது என்று கூறினார். அதன் பிறகு இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட் ஆக இது இருக்கும் என்றும் கூறினார்.