BSNL எண்ணுக்கு வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ய விருப்பப்பட்டால் பிஎஸ்என்எல் 70 நாட்கள் செல்லுபடியாகும் சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு உள்ளது. இந்த ரீசார்ஜ் பிளானின் முழு விவரத்தை நாம் காண்போம். BSNLன் ரூபாய்.197 திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இது 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. BSNL வாடிக்கையாளர்கள் 70 தினங்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் 15 நாட்களுக்கு தினசரி 100 SMS நன்மைகளை தருகிறது.

அதோடு 15 நாட்களுக்கு இலவச பலன்களுக்கு பிறகு வாய்ஸ், டேட்டா மற்றும் SMS போன்றவை அடிப்படை கட்டணத்தின்படி வசூலிக்கப்படும். இந்த திட்டம் ஏராளமான தொலைத்தொடர்பு வட்டங்களில் கிடைக்கிறது. எனினும் இத்திட்டம் அனைத்து வட்டங்களிலும் கிடைக்காமல் போகலாம். இதனை BSNL ஆப்(அ)இணையதளத்தில் நீங்கள் சரிப்பார்க்கலாம்.