மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக மிரிக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரிக் மற்றும் குர்சியோங்கை இணைக்கும் டுடியா இரும்பு பாலம் இடிந்து விழுந்ததால், முக்கிய நகரங்களுக்கும் சுற்றுலாப் பகுதிகளுக்கும் செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பெரும் சவாலாக உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 110-ல் உள்ள ஹுசைன் கோலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, கிராமங்களிலிருந்து நெடுஞ்சாலைகளுக்கு செல்லும் பாதைகள் மண்ணால் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பதிவான காட்சிகள், சாலைகளை மண் மற்றும் கற்கள் மூடியிருக்கும் பரிதாப நிலையை வெளிப்படுத்துகின்றன.
Bridge Collapse in Dudhia:
Continuous overnight rainfall led to the collapse of the iron bridge connecting Siliguri and Mirik over the Balason River at Dudhia.#NorthBengal #Dudhia #Rain #mirik pic.twitter.com/KcGJJh9Dt1— Kamalika Sengupta (@KamalikaSengupt) October 5, 2025
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட அறிவிப்பின்படி, டார்ஜிலிங், காலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் துணை-ஹிமாலய பகுதிகளில் ஞாயிறு காலை வரை மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஜார்க்கண்ட், தெற்கு பிஹார், தென்கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, சனிக்கிழமை மாலைக்குள் பலவீனமடையும் என வானிலை மையம் கணித்துள்ளது.
Massive Rain Triggers Devastation in Darjeeling, Kalimpong, and Sikkim – At least 6 confirmed dead – more being updated
Torrential rains have unleashed widespread destruction across the Darjeeling, Kalimpong, and Sikkim regions, claiming multiple lives and severing vital… pic.twitter.com/pAbvTt3Uwe
— The Darjeeling Chronicle (@TheDarjChron) October 5, 2025
மேலும், முர்ஷிதாபாத், பிர்பூம் மற்றும் நதியா மாவட்டங்களில் திங்கட்கிழமை காலை வரை கனமழை தொடரும் எனவும், பங்குரா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 65.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Multiple landslides in and around Darjeeling—en route to Bagdogra airport due to heavy rains overnight. @AkasaAir @IndiGo6E @airindia @AirIndiaX pic.twitter.com/uOWFzreHj4
— MS (@BigMoozy87) October 5, 2025
இந்நிலையில், மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
