ராம்பூர் டிப்போவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் அரசு பேருந்து, சனிக்கிழமை மாலை கட்டுப்பாட்டை இழந்ததில் ராம்பூர் அருகே பிரஜ்காட்டில் உள்ள கங்கா பாலத்தில் பெரும் விபத்தில் சிக்கியது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் மாலை 4 மணியளவில் நடைபெற்றது. பேருந்து கங்கா பாலத்தை கடக்கும் வேளையில், அதிவேகத்தில் சுழன்று, தண்டவாள தடுப்புச்சுவரில் மோதியது. அதன் விளைவாக தடுப்புச்சுவர் உடைந்து பேருந்தின் பாதி பகுதி பாலத்தின் விளிம்பில் தொங்கும் நிலைக்கு சென்றது.

இதைக் கண்ட பயணிகள் பீதியில் அலறிக் கூச்சலிட்டனர். பேருந்தில் மொத்தம் 16 பயணிகள் பயணம் செய்தனர். அனைவரும்  காயமடைப்பதற்குமுன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

 

இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதில், பேருந்து பாலத்தின் விளிம்பில் ஆபத்தான முறையில் தொங்கும் காட்சிகள் தெளிவாக காணப்படுகிறது. முழு பேருந்தும் கங்கை நதிக்குள் விழுந்திருக்கக்கூடிய நிலை தடுக்கப்பட்டதாகவும், இது மிகப்பெரிய உயிரிழப்பை தவிர்த்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் மீட்புப் பிரிவினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். பேருந்தை பாதுகாப்பாக அகற்ற கிரேன் உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணையை  ஆரம்பித்துள்ளனர்.