மயிலாடுதுறை கபாலீஸ்வர் கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோயில் நிதியை கல்வி உதவிக்காக பயன்படுத்தியது சட்டபூர்வமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கின் போது, நீதிபதிகள் “கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு?” என்ற கேள்வியைக் எழுப்பினர்.

கோயிலின் வருமானத்தை சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவது நியாயமா இல்லையா என்ற விவாதம் தற்போதைய முக்கியமான அரசியல், சட்ட ரீதியான விவாதமாகியுள்ளது. இதில் உச்சநீதிமன்றத்தின் கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.