ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா குறிவைத்து அழித்தது. இதனால் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்திய நிலையில் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே போர் நடைபெற்றது. இந்த போருக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது லெஜன்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற இருந்த இந்தியா பாகிஸ்தான் மேட்ச் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜென்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர்களான ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் புறக்கணித்த நிலையில் தற்போது ஏற்பாட்டாளர்கள் போட்டியை ரத்து செய்துள்ளனர். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது..