தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அன்றே 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் மார்ச் 15ஆம் தேதி அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுறையும் நடைபெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டசபையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம் பி ஆ.ராசா கூறியதாவது, வக்ஃப் வாரிய திருத்தக்கூட்டம் ஒட்டுமொத்த நாட்டின் விருப்பம் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் இதற்கு நேர் எதிராக தமிழ்நாட்டில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அப்படி என்றால் அது ஒட்டுமொத்த நாட்டின் விருப்பம் கிடையாது.

இந்த வேற்றுமையை நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். அரசியல் சாசனம் மீதான அப்பட்டமான தாக்குதல் தான் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் மசோதா. ஒட்டுமொத்த வக்ஃப் சொத்துக்களையும் ஒன்றிய அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. அரசு சொத்து என வரையறுக்கும் சட்ட பிரிவு ஆபத்தானது என்று அவர் தெரிவித்தார்.