திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை இருப்பதாகவே சமீப காலமாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் இன்று பலகட்ட பிரச்சனைகளை தாண்டி காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்ததாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, எங்களுக்கு தேவையான வற்றை நாங்கள் திமுக மேல் இடத்தில் கூறியுள்ள நிலையில் அவர்கள் அதனை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. எங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டு ஒதுக்குவதாக திமுக உறுதியாக தெரிவித்துள்ளது என்றார். மேலும் இதன் மூலம் 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி பேச்சு வார்த்தை உறுதியாகி உள்ளது.
