தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமும், தவெக தலைவருமான விஜய்யிடமிருந்து பிரிந்து செல்வதாகக் கூறி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்துச் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு, “தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியலையும் தயவுசெய்து ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்; ஒரு கணவன் – மனைவி இடையே இருக்கும் பிரச்சனையைப் பற்றிப் பேச யாருக்கும் உரிமை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள வேளையில், அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் பேசுபொருளாகியுள்ளது.