வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் நாகை மாவட்டம் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை தென்கிழக்கு வங்க கடலில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடுமென இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை தொடர்ந்து வங்கக்கடலில் பலத்த காற்று  வீசப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை தொடர்ந்து நாகை மாவட்டம் மீனவர்கள் மற்றும் மீனவர்கள் நலத்துறை அலுவலகம் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் இன்று சுற்றிக்கை அனுப்பி உள்ளது. அதில் புயல் சின்னம் உருவாக உள்ளதால்,  ஆள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும்,  மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாருக்கும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கபட்டுள்ளது.  மேலும் மீன்பிடிக்க வழங்கக்கூடிய டோக்கனை மீன்வளத்துறை நிறுத்தி வைத்துள்ளது. ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக கரை திரும்ப மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.