ராஜஸ்தானில் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதிக்கு நடந்த தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வியடைந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது கரன்பூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. ஏனென்றால் அப்போது போட்டியிட்ட வேட்பாளர்களில்  ஒருவர் காலமானதை தொடர்ந்து தேர்தல் தற்போது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த தேர்தல் தற்போது நடந்து. அதிலே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ருபிந்தர் கூனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை விட இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான அதிர்ச்சி வைத்தியம் போல அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இந்த தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை பலம் 69 இலிருந்து 70 ஆக உயர்ந்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே 115 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இருக்கிறது. அசோக் கெலாட் அரசு தோல்வி அடைந்து, அதற்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையிலே, அந்த புதிய அரசை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தோல்வி அடைந்திருப்பது ராஜஸ்தான் மாநில அரசியலிலே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.  இப்போதுதான் அரசு பதவி ஏற்றுள்ளது. அதற்குள்ளாகவே ஒரு அமைச்சர் ஒருவரை தோல்வியை சந்திக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சுரேந்திர பால் சிங் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.