தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய 2026-ஆம் ஆண்டின் ஜேஇஇ முதன்மைத் தேர்வு (JEE Main Session 1) முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில், மும்பையைச் சேர்ந்த மாதவ் விராடியா உள்ளிட்ட 12 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது ஸ்கோர்கார்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அடுத்தக்கட்டமாக ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்கப் பிப்ரவரி 25 கடைசி தேதி என்பதால் மாணவர்கள் இப்போதே தயாராகத் தொடங்கியுள்ளனர்.
