தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர தூய்மைப் பணியாளர்களுக்குப் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிவோருக்கான மாதாந்திர ஊதியம் ₹1,000-லிருந்து ₹1,500 ஆகவும், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிவோருக்கான ஊதியம் ₹1,500-லிருந்து ₹2,300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அரசின் முடிவின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 38,000 தூய்மைப் பணியாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
