நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அண்மையில் நடிகை த்ரிஷாவுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்ததோடு ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்து மணமக்களை வாழ்த்தினர்.

ஏற்கனவே விஜயின் மனைவி சங்கீதா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கில்லி மற்றும் லியோ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொது மேடையில் ஒன்றாகத் தோன்றியது பல்வேறு வதந்திகளுக்கு வித்திட்டுள்ளது.

இந்தச் சூழலில் விஜயின் பாதுகாவலர் ஆருண் சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வதந்திகளையும் தாண்டி எழ வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டுள்ள அவர் கில்லி படத்தில் இடம்பெற்ற பாடலையும் அதனுடன் இணைத்துள்ளார்.

அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இந்தத் திருமண நிகழ்வு குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் இது தொடர்பாக ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.