அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் இன்றைய தினம்   விசாரித்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆஜராகி,  செந்தில் பாலாஜியின்  மருத்துவ பரிசோதனை தொடர்பான முழு அறிக்கையை நீதிமன்ற உத்தரவின் படி தாக்கல் செய்தார். அதனை மேற்கோள்காட்டி இன்றைய தினம் வாதத்தை தொடங்கிய போது,  அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை நீதிபதிகளிடம் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக  பாலாஜி செந்தில் பாலாஜிக்குள்ள பாதிப்புகளால் ஸ்டோக் வர வாய்ப்புள்ளதாக  அறிக்கையில் தெரிவிப்பதாகவும், மருத்துவர்கள் தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாகவும், தேவையான பரிசோதனையும் செய்யப்பட வேண்டும். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்குவது கட்டாயம் என மருத்துவர் அறிக்கையை  மேற்கோள்காட்டி வாதங்களையும் முன் வைத்திருந்தார்.

அதற்கு நீதிபதிகள் தேவையான பரிசோதனைகள் ஏற்கனவே செய்தாகிவிட்டது.   அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் இந்த மருத்துவ அறிக்கையின்  அடிப்படையில் தற்போது அது போன்று எந்த ஒரு சிகிச்சையும் தேவைப்படாது என்பதாலோ,  இந்த ஜாமீன் மனுவை திரும்ப பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்தை தெரிவித்து இருந்தார்கள்.

இதனை செந்தில் பாலாஜி ஏற்றுக்கொண்டு  தற்போது அந்த மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் செந்தில் பாலாஜியினுடைய ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றத்தில் ரெகுலர் ஜாமீனாக தாக்கல் செய்து அதனை வழக்கு விசாரணையாக தொடரலாம் எனவும். இந்த மனுவை திரும்ப பெறுவதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம் என்று நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதிகள்  கேட்டார்கள். அதன் அடிப்படையில் தற்போது மனுவானது திரும்ப பெறப்பட்டிருக்கிறது.  இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.