இருமுடி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 29ஆம் தேதி நாளை முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை வைகை, பாண்டியன் மற்றும் பொதிகை உள்ளிட்ட 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் என்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி திருச்சி ஹம்சா பார் ரயில் , சாரதா சேதுரையில் ஆகியவை நவம்பர் 29 முதல் ஜனவரி 17 வரை மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். பாண்டியன் விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில், மண்ணை விரைவு ரயில் , உழவன் விரைவு ரயில், நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில், கொல்லம் மற்றும் எழும்பூர் விரைவு ரயில், காரைக்கால் மற்றும் எழும்பூர் விரைவு ரயில், நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அதிவிரைவு ரயில் ஆகியவை மேல்மருவத்தூரில் இன்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாகர்கோவிலில் இருந்து வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்கு தாம்பரத்திற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பர் 3 முதல் ஜனவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே திருநெல்வேலியில் இருந்து வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையம் இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் சேவையும் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.