பொங்கலுக்கு ஒரு முழு செங்கரும்பு பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்து இருக்கிறார். கரும்புக்கு 33 ரூபாய் நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில் விவசாயிகளுக்கு 15லிருந்து 18 ரூபாய் மட்டுமே சென்று சேர்வதாக அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கரும்பு கொள்முதலுக்காக ஒரு ஒதுக்கப்பட்ட 72 கோடி விவசாயிகளை சென்று அடைய வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.