தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்றும் தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக தியேட்டர்களில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரிசு, துணிவு திரைப்படத்திற்கு அதிகாலை 1 மணி முதல் 4மணி வரை பல்வேறு  சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து தன்னுடைய  மகன் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கு சிறப்பு காட்சிக்கான உத்தரவை வழங்கியதாக தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு லஞ்ச ஒழிப்பு சாட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் விசாரணை நடத்தக்கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தாக தெரிவித்தார்.