தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்று இருந்தது.

துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 70 முக்கிய அதிகாரி பணியிடங்களுக்காக நடந்த இந்த தேர்வுக்கு சுமார் 2.50 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 28) தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் தகுதி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். தேர்வர்கள் www.tnpsc.gov.in இணையதளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு முடிவுகளைப் பார்த்துக்கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.