திமுக தலைமை செயற்குழுவின் முக்கிய உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவருமான குளித்தலை சிவராமன் (வயது 83) இன்று (ஆக.28) காலமானார்.

வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கட்சியின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றி வந்த சிவராமன், வரும் செப்டம்பர் 17ம் தேதி கரூரில் நடைபெற இருந்த திமுக முதுபெரும் விழாவில் “பாவேந்தர் விருது” வழங்கப்பட உள்ளவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு, கட்சித் தோழர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.