ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று 3 விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். பெஞ்ச் இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் இது குறித்து நீண்ட விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இன்று 3 விதமான முக்கிய தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். தலைமை நீதிபதி சந்திரசூட், பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பையும், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஒரு தீர்ப்பையும் அளித்துள்ளார்.