மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸின் அஜய் ராய், மோடியை விட 5000 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இது பாஜக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
