நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். விஜயின் மாநாட்டிற்கு பிறகு எந்தெந்த கட்சிகள் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. விஜய் நேரடியாக திமுக மற்றும் பாஜக கட்சிகளை விமர்சித்து பேசினார். அவரது கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதுவரை விஜய் தம்பி என அழைத்த சீமான் கொள்கை ரீதியாக விஜய் தனது அரசியல் எதிரி என பேசினார். வருகிற 2026 தேர்தலை எதிர்நோக்கி கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் வருகிற 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என் பயணம் என் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடர மாட்டேன் என கூறியுள்ளார்.