தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக்காக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் நடிகர் விஜய் பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் அந்த நடிகையை வீட்டிற்கு அழைத்து வந்ததால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் விஜய் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் தரவேண்டும் எனவும் விவாகரத்து முடியும் வரை நீலாங்கரை வீட்டில் தங்கி இருக்க அனுமதி வேண்டும் எனவும் சங்கீதா தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவாகரத்து சர்ச்சைக்குகளுக்கு மத்தியில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் நடிகர் விஜய் பிரபல நடிகை ஒருவருடன் கலந்து கொண்டதால் மீண்டும் இந்த வழக்கு பூதாகரமாக வெடித்தது. இதற்கிடையில் அவரது மனைவி சங்கீதா விஜய் தன்னை நீலாங்கரை வீட்டில் இருக்க விடாமல் பிரச்சனை செய்வதாக கூறி மீண்டும் மனு தாக்கல் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக இதுவரை நடிகர் விஜய் வாய் திறக்காமல் இருந்த நிலையில் இன்று மகளிர் தின கொண்டாட்ட விழாவின்போது முதன்முறையாக பேசியுள்ளார்.
அதாவது என்னுடைய சொந்த பிரச்சனைகளுக்காக நீங்கள் Hurt ஆவதை பார்க்கும்போது எனக்கும் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதெல்லாம் அவ்வளவு வொர்த் கிடையாது. அந்த விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். நாம் அனைவருமே இனி மக்களுக்காக மட்டுமே பணி செய்வோம் என்று கூறினார். மேலும் விவாகரத்து பற்றி நடிகர் விஜய் கூறியதால் தற்போது அவரது மனைவி சங்கீதா மனுதாக்கல் செய்துள்ளது உறுதியாகி உள்ளது.
#Watch | “அவ்ளோ Worth-லாம் கிடையாது” – விவாகரத்து வழக்கு குறித்து விஜய் பேச்சு#SunNews | #TVKVijay | #Vijay | #Divorce pic.twitter.com/2MdEmT6TSp
— Sun News (@sunnewstamil) March 7, 2026
