தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5  மக்களவைத் தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய சென்னை தொகுதியில் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் தொகுதியில் நல்லதம்பி, கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து, தஞ்சையில் சிவநேசன் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக விஜயபிரபாகர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.