தொடர் விடுமுறையை முன்னிட்டு பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் கோவைக்கு விமான கட்டணம் 3674 ரூபாயிலிருந்து (ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு) 8, 555 முதல் 12716 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதேபோல மும்பை, டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது.