சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதில் நடிகர் சூர்யா காயமடைந்தார். சண்டை காட்சியின்போது கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்துள்ளது. இதில் அவர் காயமடைந்ததால் உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், விபத்து காரணமாக இன்று படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது