இந்தியாவில் நடைபெறும் மக்களாட்சியில் நியமன ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில், “ஆளுநர் ஒரு அடையாள தலைவர்தானே தவிர, மொத்த அதிகாரமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கே உண்டு. ஆளுநருக்கு மசோதாவை நிறுத்திவைக்கும் உரிமை கிடையாது. அதனை உடனடியாக சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.