மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் தலைவர் விஜய் உரையாற்றிய போது, அதிமுகவின் தற்போதைய நிலையை கடுமையாக விமர்சித்தார். “எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி தொண்டர்கள் வேதனையுடன் தவிக்கிறார்கள்” 2026 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று மக்கள் நன்றாகவே அறிவார்கள்” என விஜய் கூறினார். இந்த கருத்து அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்வலை உருவாக்கியது.

விஜயின் இந்த பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் பதிலடி கொடுத்துள்ளார். “ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் இவரை நம்பி எப்படித் தொண்டர்கள் வருவார்கள்? விஜய் அறியாமையில் பேசுகிறார். என்று பதிலளித்துள்ளார். இவ்வாறு, விஜய்-இபிஎஸ் இடையிலான கட்சி விமர்சனம் தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.