கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “விஜய் தலா ரூ.1 கோடி, தமிழக அரசு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்” என்றும், மேலும் இந்த விபத்துக்கு காரணமான அலட்சியம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
