தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் கட்சிக்கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி தங்களுடைய சின்னம் யானை எனவும் அதனை விஜய் பயன்படுத்தக்கூடாது எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால் சமீபத்தில் அந்த வழக்கை அவர்கள் வாபஸ் பெற்ற நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிகயையும் மனுதாரராக சேர்த்து யானை சின்னம் தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள நிறத்திற்கும் பிரச்சனை வந்துள்ளது.

அதாவது தொண்டை மண்டல சான்றோர் தர்மபரிபாலன சபை சிவப்பு மஞ்சள் நிறம் என்பது நாங்கள் பதிவு செய்தது எனவும் அதனை தமிழக வெற்றிக்கழகம் தங்கள் கொடியில் பயன்படுத்தக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில் சபை ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே அந்த நிறத்தை பயன்படுத்த முடியும் எனவும் வேறு யாரும் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தமிழக வெற்றி கழகத்தின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.