இந்திய ரிசர்வ் வங்கி தற்போது குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே முன்னதாகவும் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த நிலையில் தற்போது 0.25 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இதனால் தற்போது 5.25 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான இஎம்ஐ இனி குறையும். மேலும் இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
