அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு புதிய சாதனைகளை இந்திய அணி படைத்துள்ளது. 2024-ல் ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்ற இந்தியா, தற்போது 2026-ல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் வென்று, டி20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து இருமுறை வென்ற முதல் அணி என்ற சாதனையைப் படைத்தது.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில், போட்டியை நடத்தும் நாடு கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். டி20 உலகக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இந்திய அணி மூன்று முறை உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் டி20 உலக கோப்பையை வென்ற சூரியகுமார் தலைமையில் ஆனா இந்திய அணிக்கு தற்போது பிசிசிஐ 130 கோடி பரிசு தொகையை அறிவித்துள்ளது. மேலும் வரலாற்று வெற்றியை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ வாழ்த்து தெரிவித்த நிலையில் இந்த அதிரடியான பரிசு தொகையையும் அறிவித்துள்ளது.
