டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக மகுடம் சூடியுள்ள நிலையில், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனின் எளிமையான குணமும், அவர் தனது மனைவி குறித்துப் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்ற பிறகு, வீரர்கள் அனைவரும் உற்சாகத்தில் மூழ்கினர். இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் மைதானத்தில் தங்கள் தோழிகளுடன் நடனமாடி வெற்றியைத் தாரை தப்பட்டை முழங்கக் கொண்டாடினர்.
View this post on Instagram
ஆனால், இந்த உலகக் கோப்பை தொடரின் ‘தொடர் நாயகன்’ விருது வென்ற சஞ்சு சாம்சன், எந்த ஆரவாரமும் இன்றி மைதானத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவை அருகில் அழைத்து அவர் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த வீடியோ, ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஆடம்பரமான கொண்டாட்டங்களை விட சஞ்சுவின் எளிமையே அழகு” என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் மைதானத்தில் மற்ற வீரர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தபோது, சஞ்சு சாம்சன் காட்டிய முதிர்ச்சியும், தனது குடும்பத்தின் மீதான அன்பும் அவரை உண்மையான ‘சாம்பியனாக’ உயர்த்திக் காட்டியுள்ளதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
