தமிழகத்தில் மதுரை மாநகராட்சியில் நடந்த 200 கோடி வரி முறைகேடு கூறுகின்றது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பெயரில் மாநகராட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இருநிலை குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.
இந்த வழக்கில் ஓய்வு பெற்ற கமிஷனர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு முன்பாகவே கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி அவரை ஏற்கனவே திமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவி ஏற்பட அனைத்து பதிவுகளிலிருந்தும் அமைச்சர் துரைமுருகன் நீக்கினார்.
இந்த வழக்கில் தூத்துக்குடி உதவி கமிஷனர் ஆக செயல்பட்டு வந்த சுரேஷ்குமார் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் சென்னையில் பொன்வசந்த கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை மதுரைக்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் திமுக நிர்வாகியாக செயல்பட்டு வந்த பொன்வசந்த் தன்னுடைய மனைவியின் பெயரை தவறாக பயன்படுத்தி பல குற்ற செயல்களை செய்ததாக புகார் எழுந்ததால் அவரை கட்சியில் இருந்து திமுக நீக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் தற்போது பொன் வசந்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை மதுரைக்கு அழைத்து வந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் இசிஜியில் மாறுதல் உள்ளதாக டாக்டர்கள் கூறிய நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை வழங்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
